Publish Date: Tue, 09 May 2017 (17:15 IST)
Updated Date: Tue, 09 May 2017 (17:18 IST)
1000 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியிருக்கும் அந்த பிரமாண்ட படத்தால், பல படங்களின் ரிலீஸுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம் வெளியாக வேண்டிய பல படங்கள், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸில் இருந்து பின்வாங்கின.
வரும் வாரத்துடன் படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. ஆனாலும், மக்கள் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்க வருவதால், பல தியேட்டர்கள் இந்த வாரமும் புது படங்களை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், அரசியல் வாரிசு நடிப்பில் இந்த வாரம் ரிலீஸாக இருக்கும் படத்திற்கு, போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். மற்றவர்களைப் போல தானும் ரிலீஸைத் தள்ளி வைத்திருக்கலாமோ என்று கலக்கத்தில் இருக்கிறாராம்.