Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவங்களே குண்டு வைப்பாங்களாம்... அப்புறம் அவங்களே அதை எடுப்பாங்களாம்

Advertiesment
குண்டு
அவங்களே குண்டை வச்சு, அப்புறம் அவங்களே அதை அப்புறப்படுத்தியது போலிருக்கிறது, முன்னாள் தலைவரின் செயல்பாடுகள். நான் மிஸ்டர் க்ளீன் என்பதை காண்பிக்க, சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில் ரத்து செய்ததாக நேற்று அறிவித்தார்.

சங்கத்தின் சார்பில் போட்ட ஒப்பந்தத்தை எப்படி தனிநபர், அவர் தலைவராக இருந்தாலும் ரத்து செய்ய முடியும்? தேர்தல் முடிந்த பின் ஒப்பந்தத்தை ரத்து செய்தால், தலைவர் பொறுப்பில் இல்லாத ஒருவர் எப்படி ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்ற கேள்வி வரும் என்பதற்காகவே, சென்ற மாதமே ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அவர் அறிவித்தார்.

ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தால் அதன் மோசமான ஷரத்துகள் இப்போதைய அணியின் பார்வைக்கு வரும், அதில் உள்ள முறைகேடுகள் வெளிச்சமாகும் என்பதாலேயே முன்னாள் தலைவர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக திடீர் குண்டை போட்டுள்ளார்.

உஜாலா போட்டு வெளுத்தாலும் சில மோசடிகள் சுத்தமாவதில்லை மிஸ்டர் க்ளீன் சார்.

Share this Story:

Follow Webdunia tamil