கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் திரையுலகில் ஐந்து வருடங்கள் காணாமல் போன வைகைப்புயல் வடிவேலு, கடந்த சில வருடங்களாகத்தான் படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் அவருடைய ரீ எண்ட்ரியில் பெயர் சொல்லும் படங்கள் வெளியாகவில்லை
இந்த நிலையில் ஷங்கரின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பல தயாரிப்பாளர்களை கண்ணீர் விட வைத்த ஷங்கரையே ஆட்டிப்படைத்துவிட்டார் வடிவேலு. முடிவு அந்த படம் டிராப்
இந்த நிலையில் ராம்பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி ஒருசில லட்சங்களையும் அட்வான்ஸாக பெற்ற வடிவேலு, படத்தின் திரைகதையில் குறுக்கிட்டதால் ஒருகட்டத்தில் வெறுத்து போன இயக்குனர் வடிவேலுவை படத்தில் இருந்தே தூக்கிவிட்டாராம். ஆனால் அவருக்கு கொடுத்த அட்வான்ஸை அவரால் பெற முடியவில்லை. அட்வான்ஸை கொடுக்காவிட்டால் வடிவேலும் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பதாக கூட ராம்பாலா மிரட்டி பார்த்துவிட்டார். ஆனால் இதற்கெல்லாம் அசராமல் அமைதி காத்து வருகிறாராம் வைகைப்புயல்