Publish Date: Tue, 02 Dec 2014 (12:27 IST)
Updated Date: Tue, 02 Dec 2014 (12:29 IST)
தேவாம்சம் கொண்ட யானி நடிகை சினிமாவில் வாய்ப்பு வறண்டதும் தொலைக்காட்சிக்கு வந்தார். பல வருடங்கள் தொலைக்காட்சியின் சூப்பர்ஸ்டாராகவும் இருந்தார். நெடுந்தொடரில் நடித்தவர்களில் அப்போது அதிக சம்பளம் வாங்கியவர் அவர்தான்.
அவர் இப்போது எங்கே?
சத்தமில்லாமல் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நடித்துக் கொண்டே இருக்கிறோமே என்று ஒருநாள் திடீரென்று டீச்சர் ட்ரெய்னிங் படித்தாராம். பிறகு தனது குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே டீச்சராக சேர்ந்திருக்கிறார். இந்த புதிய வேலை ரொம்பவும் பிடித்திருப்பதால் அதையே தொடர முடிவு செய்துள்ளாராம்.
நடிகைள் முன்மாதிரியாக கொள்ள வேண்டிய நடிகை.
வீரமணி பன்னீர்செல்வம்
Publish Date: Tue, 02 Dec 2014 (12:27 IST)
Updated Date: Tue, 02 Dec 2014 (12:29 IST)