Publish Date: Tue, 02 Dec 2014 (12:17 IST)
Updated Date: Tue, 02 Dec 2014 (12:18 IST)
கருப்பு சிவப்பிலிருந்து விலகிய நடிகை தேசியத்தில் ஐக்கியமானதை இந்திய சுதந்திரப் போருக்கு இணையாக கற்பனை சேர்த்து எழுதி வருகின்றன மீடியாக்கள். கூட்டத்தோடு கூட்டமாக சில விஷமிகள் நடிகையின் குடும்பத்தின் மீது கல்லெறியவும் தயங்கவில்லை.
நடிகையின் நான்ஸ்டாப் அரசியல் போக்கு நடிகையின் கணவரான இயக்குனருக்கு பிடிக்கவில்லை. அதனால் எந்த நேரமும் நடிகையை அவர் பிரியலாம், எதற்கும் தயாராக இருங்கள் என்பதாக ஒரு புயல் எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
நடிகைக்கு நெருக்கமானவர்களோ, நடிகையின் அரசியல் விருப்பங்களுக்கு கணவர் இதுவரை கை காட்டியதே இல்லை, அப்புறம் எப்படி பிரிவு வரும் என்று நியாயமான கேள்வி எழுப்புகிறார்கள். மரம் சும்மாதான் இருக்கிறது. இவர்கள் ஏன் தேவையில்லாமல் அதனை உலுக்குகிறார்கள்?
வீரமணி பன்னீர்செல்வம்
Publish Date: Tue, 02 Dec 2014 (12:17 IST)
Updated Date: Tue, 02 Dec 2014 (12:18 IST)