Publish Date: Fri, 03 Oct 2014 (20:49 IST)
Updated Date: Fri, 03 Oct 2014 (20:51 IST)
அண்ணனை வைத்து இரும்பு மாதிரி படம் கொடுத்த அந்த ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் தற்போது ஒல்லி நடிகரை வைத்து படம் இயக்கி வருகிறார். அதில் வாய்ஸ் கொடுக்க அண்ணனின் தம்பியை அழைத்துள்ளார். தம்பி மறுப்பே சொல்லாமல் வந்து வாய்ஸ் தந்துள்ளார்.
வந்த இடத்தில் இயக்குனர் தம்பியிடம் ஒரு கதை சொல்ல, அற்புதமான கதை என்று தம்பி சிலாகிக்க, உங்களையே இதில் நடிக்க வைக்கிறேன் என்று இயக்குனர் அவரை குளிர்விக்க, வாய்ஸ் கொடுக்கப் போன இடத்தில் பக்கா வாய்ப்புடன் திரும்பியுள்ளார் தம்பி.
தம்பியின் சென்னை படம் செமையாகப் போவதால் தம்பியும் ஹேப்பி, அவருக்கு வாய்ப்பு தந்த இயக்குனரும் ஹேப்பி. தயாரிப்பாளர் கிடைக்க சிரமமில்லையே.
வீரமணி பன்னீர்செல்வம்
Publish Date: Fri, 03 Oct 2014 (20:49 IST)
Updated Date: Fri, 03 Oct 2014 (20:51 IST)