Publish Date: Tue, 12 Aug 2014 (11:12 IST)
Updated Date: Tue, 12 Aug 2014 (12:19 IST)
அடடா மழை நடிகை தெலுங்குப் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடினார். தமிழைவிட தெலுங்கில் பிரபல நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவது சகஜம். ஹீரோக்கள், இயக்குனர்களின் நட்புக்காக இப்படி ஆடுவதுண்டு.
அடடா மழை நடிகை ஆடியது லம்பாக கிடைத்த சம்பளத்துக்காக என்று இன்டஸ்ட்ரியிலேயே சில போட்டியாளர்கள் கிசுகிசுக்க, கொதித்துவிட்டார் நடிகை. தெலுங்கில் எனக்கு லைஃப் கொடுத்த இயக்குனர், தயாரிப்பாளர் என்பதால் ஆடினேன். சம்பளம் வாங்கினேன்தான். ஆனால் சம்பளத்துக்காக ஆடவில்லை என்று பாப்கார்னாக பொரிந்துள்ளார்.
துட்டு வாங்கிவிட்டு நட்பு என்று சொன்னால் நாலாவது மனுஷனும் சிரிக்கத்தானே செய்வான்?
வீரமணி பன்னீர்செல்வம்
Publish Date: Tue, 12 Aug 2014 (11:12 IST)
Updated Date: Tue, 12 Aug 2014 (12:19 IST)