Publish Date: Mon, 08 May 2017 (13:41 IST)
Updated Date: Mon, 08 May 2017 (13:47 IST)
சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாத பப்ளிமாஸ் நடிகை, தற்போது நடன புயலிடம் தஞ்சமாகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
நடன புயல் இயக்கத்தில் உருவான காதல் படத்தில், வெற்றி நாயனுக்கு ஜோடியாக பப்ளிமாஸ் நடிகை நடித்தார். அந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் அமைந்தது. அதன் பின் வம்பு நடிகரின் காதல் வலையில் வீழ்ந்தார். பின் அவரிடமிருந்து விலகினார்.
தற்போது, அவருக்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லை. இவருடன் ஜோடி சேர்ந்த நடிகர்களே, தற்போது புதிய நடிகைகளின் மீது பார்வையை திருப்பியுள்ளனராம். தற்சயம், அவர் நடன புயலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், தனக்கு தெரிந்தவர்களிடம் நடிகைக்கு சிபாரிசும் செய்கிறாராம் நடனப் புயல்.
தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி இவர்கள்தான் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.