Publish Date: Fri, 02 Jun 2017 (17:03 IST)
Updated Date: Fri, 02 Jun 2017 (17:15 IST)
அரசியல்வாதி இயக்கும் படத்தில், பிரகாச இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கிறார்.
பெயரிலேயே செல்வச்செழிப்பைக் கொண்டவர் இந்த அரசியல்வாதி. மிகச்சிறந்த இயக்குநராக வரவேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை. ஆனால், இவர் எடுத்த படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நடிகராகவும் முயற்சித்துப் பார்த்தார். அதுவும் செட்டாகாததால், கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியலில் குதித்தார். ஆனால், அதுவும் வேலைக்கு ஆகவில்லை.
எனவே, மறுபடியும் சினிமாவுக்குள் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். விக்ரம், அஜித், விஜய், சூர்யா, மாதவன் என, அந்தக் கதையைக் கேட்காத நடிகர்கள் இல்லை. ஒவ்வொருவர் வீடாக அலைந்து முட்டி தேய்ந்ததுதான் மிச்சம். ஆனால், ஒருவர் கூட நடிக்க ரெடியாக இல்லை. இந்நிலையில், ஹீரோவாக நடிக்கும் பிரகாச இசையமைப்பாளர் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம். படத்துக்கு ‘கோபம்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.