Publish Date: Tue, 06 Jun 2017 (17:07 IST)
Updated Date: Tue, 06 Jun 2017 (17:45 IST)
சின்னச் சின்ன விஷயங்களாக ஸ்கெட்ச் போட்டு, மிகப்பெரிய விஷயத்துக்காக காய் நகர்த்தி வருகிறார் ஒல்லி நடிகர் என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் எல்லோரின் கனவு, குறிப்பாக ஹீரோக்களின் கனவு, ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் நமக்கு கிடைக்காதா என்பதுதான். காரணம், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் அந்தப் பட்டத்துக்கான மவுசு இருக்கிறது. தல, தளபதி, வம்பு, டான்ஸ் மாஸ்டர் என பலரும் தெரிந்தோ, இலைமறை காயாகவோ அந்தப் பட்டத்துக்கு அடிபோட்டு வருகிறார்கள்.
ஆனால், போட்டியில் இல்லாதது போலவே மவுனமாக இருந்து காரியம் சாதித்து வருகிறார் ஒல்லி. ‘சூப்பர் ஸ்டார்’ மகளைத் திருமணம் செய்ததில் இருந்து இந்தத் திட்டம் தொடங்குகிறது. தற்போது அவரை வைத்து ஒரு படத்தைத் தயாரிப்பதில் நிற்கும் ஸ்கெட்ச், அவருடைய சின்ன வயது கேரக்டரில் நடிக்கும் திட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அப்புறமென்ன? சின்ன சூப்பர் ஸ்டாராக அவரை ஏற்றுக் கொள்ளும் தமிழக மக்கள், அடுத்து அரசியலுக்கு அழைப்பார்கள்.