அந்த நடிகருடன்தான் நடிப்பேன்; அடம்படிக்கும் நம்பர் ஒன் நடிகை

புதன், 11 ஜூலை 2018 (17:19 IST)
நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, குறிப்பிட்டு அந்த நடிகர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தாராம்.

 
தமிழ் சினிமாவில் தற்போது பெரிய நம்பர் நடிகைதான் கொடிகட்டு பறக்கிறார். அவர் ஹீரோ இல்லாமல் நடிக்கும் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
 
இந்நிலையில் இவர் நடிக்கும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகரை தேர்வு செய்யலாம் என்று படக்குழு முடிவு செய்ததாம். ஆனால் இவரோ தனக்கு சுமார் மூஞ்சி குமாரு நடிகர்தான் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். 
 
இவரது கோரிக்கை படியே படக்குழுவினரும் அந்த நடிகரை நடிக்க ஒப்பந்தம் செய்தார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிக்பாஸ் குரல் செம எரிச்சல் : ஆனந்த் வைத்தியநாதன் பேட்டி