Publish Date: Wed, 03 May 2017 (16:35 IST)
Updated Date: Wed, 03 May 2017 (16:42 IST)
பார்த்தாலே கன்னத்தைக் கிள்ளி கொஞ்சத் தோன்றும் தோற்றமுடையவர் இந்த இனிஷியல் இசையமைப்பாளர். சில நடிகைகள் அப்படிக் கொஞ்சியும் இருக்கிறார்கள்.
ஒரே மெட்டை இவர் திரும்பத் திரும்ப போட்டாலும், எல்லாமே கேட்கிற மாதிரி இருக்கும் என்பதுதான் இவருடைய பிளஸ். அமுல் பேபி மாதிரி இண்டஸ்ட்ரியில் வளைய வந்தவர், சிக்கென சிறுத்துவிட்டார்.
சின்ன வயதில் இருந்தே சாப்பாட்டுப் பிரியரான இவர், ஆசைப்பட்டதை வாங்கி உடனே தின்று விடுவாராம். அதிலும், பிரியாணி என்றால் கேட்கவே வேண்டாம். இதனால், 100 கிலோவுக்கும் மேல் எடை போட, ஆரோக்கியத்துக்கு கேடு என்பதால் எடையைக் குறைத்திருக்கிறார். டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் 25 கிலோ எடை குறைத்திருக்கிறாராம் அவர்.