Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படம் ரிலீஸ் ஆகும் முன்பே விமர்சனம் போட்ட மேதாவிகள்

Advertiesment
ஒரு படம் ரிலீஸ் ஆனால் போட்டி போட்டுக்கொண்டு முதலில் விமர்சனம் போடுவது யார் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் இடையே போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அதற்காக ரிலீஸ் ஆகும் முன்னர் விமர்சனம் போடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.



 


நேற்று சிம்பு நடித்த 'AAA' திரைப்படம் ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக அதிகாலை காட்சி மற்றும் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. முதல் காட்சியே மதியம் 12 மணிக்குத்தான் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு இன்னும் பிரஸ் காட்சி போடவில்லை என்பதால் இந்த படத்தை நேற்று 12 மணிக்கு முன் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை

ஆனால் ஆன்லைனில் ஒருவர் காலை 9 மணிக்கே இந்த படத்தின் விமர்சனத்தை போட்டுவிட்டார். மேலும் யூடியூபில் திரைவிமர்சனம் செய்யும் ஒரு பிரமுகர் அந்த விமர்சனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். படம் ரிலீஸ் ஆகும் முன்பே விமர்சனம் போட்டு தங்களது மேதாவித்தனத்தை காண்பித்த முந்திரிக்கொட்டைகளுக்கு டுவிட்டரில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மெர்சல்' தெலுங்கு டைட்டில் தேதி அறிவிப்பு! தெலுங்கிற்கு புதிய ஃபர்ஸ்ட்லுக்கா?