மீண்டும் தொடங்கும் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு
நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த ’மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி அதிகாரபூர்வமாக அறிவித்தார்
இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென மீண்டும் ஒரு சில காட்சிகளை படமாக்க வேண்டும் என ஆர்ஜே பாலாஜி கூறியதாகவும் இதனால் தயாரிப்பு தரப்பிலிருந்து நயன்தாராவை அணுகி மீண்டும் ஒரு சில நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என நயன்தாராவிடம் கேட்டதாக தெரிகிறது.
நயன்தாரா ஏற்கனவே பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் தேதி கொடுக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் இருப்பினும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு சில நாட்களை மட்டும் ஒதுக்கி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து மீண்டும் ஒரு சில காட்சிகளை ஆர்ஜே பாலாஜி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது