Publish Date: Tue, 03 Nov 2015 (18:12 IST)
Updated Date: Tue, 03 Nov 2015 (18:14 IST)
ஒல்லி நடிகரின் காட்டில் கரன்சி மழை. அவரது சமீபத்திய தயாரிப்பான ரவுடியும், வசூலை அள்ளி வீசியிருக்கிறான். இந்த கன மழையில் மேலுமொரு காற்றழுத்த தாழ்வுமண்டலம். அதாவது, மீண்டுமொரு பெருமழைக்கான கருமேகங்கள் சூழ்ந்திருக்கிறது நடிகரின் வானில்.
நடிகர் இரண்டு வேடங்களில் நடிக்கயிருக்கும் படத்தை பிரபல நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் ஏற்கனவே நடிகரின் தயாரிப்பில் உருவான எதிர் ஸ்விம்மிங், காக்கி உடுப்பு படங்களை வாங்கி எக்கச்சக்கமாக லாபம் பார்த்தவர்கள். படத்தை நடிகரே தனது நிறுவனம் சார்பில் முதல் காப்பி அடிப்படையில் தயாரித்துத்தர முன் வந்துள்ளார்.
முதல் காப்பிக்கு நடிகர் கேட்டது 35 கோடிகள். அவ்வளவுதானே வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது தயாரிப்பு நிறுவனம். ஒல்லி நடிகரின் படத்துக்கு, பணத்தை எரிக்கிற காட்சி வைத்தாலும் பதினைந்து கோடியை தாண்டாது பட்ஜெட். அப்படியிருக்க 35 கோடிகள் ஒரே படத்தில் கிடைக்கிறது என்றால், லாபத்தை நீங்களே கூட்டிக்கழித்து வயிற்றில் தீ வளர்த்துக் கொள்ளுங்கள்.
Caston
Publish Date: Tue, 03 Nov 2015 (18:12 IST)
Updated Date: Tue, 03 Nov 2015 (18:14 IST)