Publish Date: Fri, 12 May 2017 (17:40 IST)Updated Date: Fri, 12 May 2017 (17:51 IST)
அணில் என்று ஆமை ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர், பெயரிடப்படாத படத்தில் 3 வேடங்களில் நடித்து வருகிறார். அப்பா – இரண்டு மகன்கள் என்று அமைந்துள்ளன அந்த வேடங்கள். அதில், அப்பா கிராமத்துப் பண்ணையாராக நடிக்கிறார். ஒரு மகன் டாக்டர், இன்னொரு மகன் போலீஸ் என தகவல் கசிந்தது.
ஆனால், அதில் ஒன்று மட்டும் உண்மையில்லை என்கிறார்கள். ஒரு மகன் டாக்டர் என்பது உண்மையாம். ஆனால், இன்னொரு மகன் போலீஸ் என்பது உண்மையில்லையாம். மேஜிக் காட்டும் வித்தைக்காரராக நடித்திருக்கிறாராம் அணில். சருமப் பிரச்னையால் அடிக்கடி பாதிக்கப்படும் நடிகைதான் வித்தைக்காரருக்கு ஜோடியாம்.