Publish Date: Tue, 02 May 2017 (16:22 IST)
Updated Date: Tue, 02 May 2017 (16:29 IST)
மலையாளத்தைச் சேர்ந்த நடிகையின் வாரிசான இந்த நடிகை, பெயரிலேயே புகழைக் கொண்டிருப்பவர். ஒன்றிரண்டு படங்களிலேயே தளபதி, பிரகாச நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டார். இதனால், தமிழில் அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது.
ஆனால், நடிகை கொஞ்சம் பூசினாற்போல் இருந்தார். இதனால், தளபதியுடன் நடித்த படம் வெளியானபோது, ‘சோத்தைக் குறைம்மா…’ என்று கமெண்ட் அடித்தனர் ரசிகர்கள். இந்நிலையில், சமீபத்தில் நடிகையை நேரில் பார்த்தவர்கள், ஆச்சரியப்பட்டார்களாம். காரணம், கணிசமாக எடை குறைந்து, சிக்கென இருந்தாராம்.
இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். தெலுங்கில் எப்படியாவது முன்னணிக்கு வந்துவிட வேண்டுமெனத் தவிக்கிறார் நடிகை. அதற்கு ஒரே வழி, கவர்ச்சி காட்டுவதுதான். ஆனால், அவரின் பூசிய உடம்பில் கவர்ச்சி காட்டினால் சகிக்காது என்பதால், எடை குறைந்து ஸ்லிம்மாக ஆகியிருக்கிறார் என்கிறார்கள்.