Publish Date: Wed, 30 Sep 2015 (16:58 IST)
Updated Date: Wed, 30 Sep 2015 (17:03 IST)
கிர்ர்னு கர்ஜிக்க வேண்டியவரை அவ்வ்னு அழ வைத்திருக்கிறது ஐடி ரெய்ட். படம் வெளிவருவதற்கு சரியாக ஒருநாள் முன்பு திட்டமிட்டே இந்த ரெய்டை நடத்தியிருக்கிறார்கள். டைகர் படம் சம்பந்தப்பட்ட அனைவர் வீடுகளும், அலுவலகங்களும் இந்த அதிரடி ரெய்டிலிருந்து தப்பவில்லை.
ஏன் இந்த திடீர் ரெய்டு என்று சம்பந்தப்பட்டவர்களுக்கே இன்னும் தெரியவில்லை. ஆனால், படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் அடுக்குமொழியில் தாடிக்காரர் டைகரை புகழ்ந்தார் அல்லவா, அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். புலிக்கு கிலியை காட்டிட்டோம்ல என்று சிலர் இணையத்தில் ஓபனாகவே எழுதியிருக்கிறார்கள்.
சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் சரியாக ஆப்பு அடிப்பதை சிலர் செவ்வனே செய்து வருகிறார்கள். இந்த செய்வினையிலிருந்து சேனாதிபதிக்கு எப்போது விடுதலையோ.
bala
Publish Date: Wed, 30 Sep 2015 (16:58 IST)
Updated Date: Wed, 30 Sep 2015 (17:03 IST)