Publish Date: Mon, 16 Mar 2015 (11:23 IST)
Updated Date: Mon, 16 Mar 2015 (11:24 IST)
சிக்கனமாக படமெடுப்பதில் பூமி நாயகன் புலி. இரண்டு வருடங்களுக்குமுன் விஸ்வரூப பிரச்சனையுடன் அவரது படம் வெளியானது. அப்படத்தை உருவாக்கும் போதே, திட்டமிட்டு அதன் இரண்டாம் பாகத்தின் முக்கால்வாசி காட்சிகளை அவர் எடுத்தார். அதாவது முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்தின் அனேக காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.
அந்த செலவை முதல் பாகத்திலேயே எடுத்துவிட்டார் பூமி நாயகன். அத்துடன் இரண்டாம் பாகத்தை பெரும் தொகைக்கு அவர் விருது கம்பெனிக்கு விற்றுள்ளார். இரண்டாம் பாகத்தில் இனி எடுக்க வேண்டிய சில காட்சிகளை, பணம் தந்தால் மட்டுமே எடுப்பேன் என்று பூமி நாயகன் கூறி வருவதால் விருது கம்பெனி படத்தை கிடப்பில் போட்டுள்ளதாக தகவல்.
Mahalakshmi
Publish Date: Mon, 16 Mar 2015 (11:23 IST)
Updated Date: Mon, 16 Mar 2015 (11:24 IST)