Publish Date: Wed, 15 Jul 2015 (10:18 IST)
Updated Date: Wed, 15 Jul 2015 (10:19 IST)
எவனா இருந்தாலும் வெட்டுவோம் ரேஞ்சில் ஆவேசத்துடன் இருக்கிறது டைகர் யூனிட். டீஸரை திருட்டுத்தனமாக வெளியிட்டவரை மட்டுமில்லை, படத்தின் புகைப்படத்தை வெளியிட்டவர்கள் மீதும் புகார் தந்திருக்கிறார்கள்.
கோடிகளில் பணம் செலவளித்து பல நூறு பேரின் உழைப்பில் தயாராகும் படத்தின் புகைப்படங்களை, டீஸரை திருட்டுத்தனமாக லவட்டி வெளியிடுவது குற்றம்தான், ஏற்றுக் கொள்ள முடியாததுதான். ஆனால், சமூகம் அப்படி மட்டுமே பார்க்காதே.
சமீபத்தில் வெளியான சரித்திர படம் தாறுமாறான வெற்றியை பெற்றிருக்கிறது. அந்தப் படத்துடன் டைகரின் டீஸர் மற்றும் புகைப்படங்களை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். அதுதான் டைகர் யூனிட்டை கிலியடையச் செய்திருக்கிறது. பட்ஜெட்டிலும், உழைப்பிலும் அது யானை என்றால் இது பூனை. காதில் புகை வரத்தானே செய்யும்.
Mahalakshmi
Publish Date: Wed, 15 Jul 2015 (10:18 IST)
Updated Date: Wed, 15 Jul 2015 (10:19 IST)