Publish Date: Thu, 05 Feb 2015 (09:49 IST)
Updated Date: Thu, 05 Feb 2015 (09:50 IST)
ஆனந்தமான கேமராமேனின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவ்வியது. அதையடுத்து ஒல்லி நடிகரை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. பல ஜென்மங்கள் தொடரும் காதல் கதையாம் இது. கடைசியில் நாயகனை வில்லனான முன்னாள் நவரச நடிகர் கொன்று புதைப்பதாக காட்சி உள்ளதாம்.
குழப்படியான முன்ஜென்ம கதை, நாயகனுக்கு சமாதி கட்டுதல் என்று பொதுப் பார்வையாளர்களை படம் திருப்திப்படுத்துமா என படம் பார்த்தவர்கள் உதட்டை பிதுக்குகிறார்கள்.
Mahalakshmi
Publish Date: Thu, 05 Feb 2015 (09:49 IST)
Updated Date: Thu, 05 Feb 2015 (09:50 IST)