Publish Date: Thu, 06 Nov 2014 (09:04 IST)
Updated Date: Thu, 06 Nov 2014 (09:06 IST)
நைஃப் படம் அப்பாவி உதவி இயக்குனர் ஒருவரின் கதையை திருடி எடுக்கப்பட்டது என்ற வாதம் இணையத்தில் நாளுக்குநாள் சூடேறி வருகிறது. காப்பி அடித்தவர்கள், அந்தாளு பொய் சொல்றார். அவரை நாங்க பார்த்ததே இல்லை என்கிறார்கள். இதில் யார் சொல்வது உண்மை? உதவி இயக்குனர் தனது ஸ்கிரிப்டை வைத்து ஓபன் விவாதத்துக்கு தயாராக இருக்கிறார்.
எதிர்தரப்பு, வழக்கு கோர்ட்டில் இருப்பதால் எந்த விவாதத்துக்கும் நாங்க தயாரில்லை என பம்முகிறது. அதேநேரம் நைஃப் ஹீரோவின் மக்கள் தொடர்பாளர் உதவி இயக்குனரை ரகசியமாக சந்தித்துள்ளார். பிரச்சனையை பேசி முடிக்கலாம் என்று உதவி இயக்குனரை சமாதானப்படுத்ததான் இந்த சந்திப்பாம்.
நாங்க காப்பி அடிக்கலை என்பவர்கள் இப்படி இருட்டு சந்தில் கருப்பு பூனை பிடிக்க வேண்டிய அவசியம் என்ன?
Mahalakshmi
Publish Date: Thu, 06 Nov 2014 (09:04 IST)
Updated Date: Thu, 06 Nov 2014 (09:06 IST)