Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியாக பிட் ஓட்டும் தயாரிப்பாளர்

Advertiesment
Gossips
பிரமாண்ட ஓரெழுத்துப் படம் தயாராகியும் திரைக்கு வராமல் இழுத்தடிக்கிறது. படத்தின் ஸீஜி வேலைகள் முடியவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் ஒவ்வொரு பத்திரிகையாளர்களாக அழைத்து தனது அலுவலகத்தில் படத்தின் பாடல்கள், சண்டைகள் என்று தனித்தனியாக போட்டு காண்பித்து வருகிறார்.

யாரும் பார்க்காத பாடல்களை, சண்டைக் காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், ஆஹா ஓஹோ என்று புகழ்வதை காதுகுளிர கேட்பதுதான் தயாரிப்பாளரின் இப்போதைய ஹாபி.
 
இப்படிதான் படத்தின் ட்ரெய்லரையும் வருகிற போகிறவர்களுக்கெல்லாம் போட்டு காண்பித்தார். அதில் யாரோ மொபைல் போனில் ட்ரெய்லரை சுட்டு இணையத்தில் வெளியிட லபோதிபோ என்று அடித்துக் கொண்டார்கள். அதேபோல் மொத்த படமும் யூ டியூபில் வெளிவந்த பிறகுதான் தயாரிப்பாளர் இப்படி தனித்தனியே சீன் காட்டுவதை நிறுத்துவார் போலிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil