Publish Date: Tue, 04 Nov 2014 (09:44 IST)
Updated Date: Tue, 04 Nov 2014 (09:46 IST)
பிரமாண்ட இயக்குனரின் ஓரெழுத்துப் படம் தமிழ் சினிமாவில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்று ஒருபக்கம் பெருமை பேசுகிறார்கள். இன்னொரு பக்கம், படத்தை உருவாக்கியவர்கள் பேசிய சம்பளம் படம் முடிந்தும் கைக்கு வரலை என்று புலம்பிக் கொண்டுள்ளனர்.
டீக்கடையிலும், தெருவிலும் புலம்பிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இணையத்திலும் தைரியமாக இந்த தடுகித வேலையை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கியாம். கிடைக்கிற சொற்ப சம்பளத்தை வைத்து காலந்தள்ளுகிறவர்கள் உதவி இயக்குனர்கள். அவர்கள் நிலையே இப்படி. இதுபோல் பெரிய சம்பளம் வாங்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கணிசமாக காசு தர வேண்டுமாம் தயாரிப்பாளர்.
படம் வரட்டும் பாக்கியை செட்டில் செய்கிறேன் என்று பணம் தராமல் இழுத்தடிக்கிறார் தயாரிப்பாளர். பாவம் அவரும்தான் என்ன செய்வார். கஜானாவில் இருந்தால்தானே கையில் வரும்.
Mahalakshmi
Publish Date: Tue, 04 Nov 2014 (09:44 IST)
Updated Date: Tue, 04 Nov 2014 (09:46 IST)