Publish Date: Mon, 03 Nov 2014 (11:02 IST)
Updated Date: Mon, 03 Nov 2014 (11:03 IST)
வாலிபர் சங்க தலைவரின் புதிய படத்தின் பெயரை போலீஸ் சட்டை என்று மாற்றியுள்ளனர். இந்தப் பெயரை பயன்படுத்த, இதே பெயரில் பூமி நாயகனை வைத்து படத்தை தயாரித்த மூன்றெழுத்து நிறுவனத்தை அணுகினர்.
அப்படியா... தாராளமாக பயன்படுத்திக்கோங்க என்று படத்தை தயாரித்திருக்கும் ஒல்லி நடிகருக்கு பச்சைக் கொடி காட்டினர். சில வருடங்கள் முன்னால் சேனாதிபதியின் பாடிகாட் படத்துக்கும் இதேபோல் மூன்றெழுத்து நிறுவனத்தை அணுகினர். அவர்கள் தயாரித்த ஒரு படத்தின் பெயர் சேனாதிபதியின் படத்துக்கு ஆப்டாக இருக்கும் என்று பெயரை பயன்படுத்த அனுமதி கேட்டனர். ஆனால் அந்த நிறுவனம் அதற்கு மறுத்துவிட்டது.
சேனாதிபதியின் படத்துக்கு முடியாது என்றவர்கள் ஒல்லி நடிகருக்கு முக மலர்ச்சியோடு அனுமதியளித்துள்ளனர். ஏன்..?
உண்மையை ஊருக்கு சொல்லுங்கப்பா.
Mahalakshmi
Publish Date: Mon, 03 Nov 2014 (11:02 IST)
Updated Date: Mon, 03 Nov 2014 (11:03 IST)