Publish Date: Mon, 03 Nov 2014 (10:56 IST)
Updated Date: Mon, 03 Nov 2014 (10:58 IST)
களவாணி நடிகரைப் பற்றி வெளியே என்ன பேசிக் கொண்டாலும் அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் தங்கம் என்று கொண்டாடுகின்றனர். பேமெண்ட் வைத்தால்தான் கேமரா முன் நிற்பேன் என்று அடம்பிடிக்கும் நடிகர்கள் மத்தியில் சம்பள பாக்கி வைத்தாலும் இவர் சண்டைக்குப் போவதில்லை. சிலரைப் போல் சம்பளத்தை முழுமையாக தந்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன் என்று பிளாக்மெயிலும் செய்வதில்லை.
தன்னை வைத்து படம் தயாரித்து நஷ்டமானால் சம்பளத்தை திருப்பித் தருகிற நல்ல குணமும் இவருக்கு உண்டு. அனேகமாக ரிட்டர்ன் பேமெண்ட் தரும் ஒரே நடிகர் இவராகதான் இருப்பார்.
தயாரிப்பாளர்கள் இவர் பேரைச் சொன்னால் அதிருவதில்லை, வெள்ள மனசுக்காரரய்யா என்று அன்பொழுக குறிப்பிட்டுகின்றனர்.
Mahalakshmi
Publish Date: Mon, 03 Nov 2014 (10:56 IST)
Updated Date: Mon, 03 Nov 2014 (10:58 IST)