Publish Date: Fri, 31 Oct 2014 (10:18 IST)
Updated Date: Fri, 31 Oct 2014 (10:19 IST)
சமீபத்தில் நடந்த விருது விழாவில் மாமி நடிகையும், அவர் காதலிப்பதாக சொல்லப்படும் தெலுங்கு உசர நடிகரும் ஒன்றாக வந்தனர். சென்னையில் என்னை எங்கே விட்டாலும் மாமியின் வீட்டுக்கு சரியாகப் போய்விடுவேன்.
எனக்கு சென்னையில் தெரிந்த ஒரே வீடு மாமியுடையதுதான் என்று மேடையிலேயே வழிந்தார். அதைக்கேட்டு ஆடியன்ஸுன் மாமியும் பொங்கிச் சிரித்தார்.
யார் கண்பட்டதோ. இந்த ஜோடி இப்போது பிரிந்துவிட்டது. இவர்கள் இப்படி டூ போட்டு டாட்டா காட்டுவது இது முதல்முறை இல்லை என்றாலும் இந்தப் பிரிவு கொஞ்சம் அசாதாரணம் என்கின்றன தகவல்கள். காரணம் கன்னட நடிகை.
பெயரில் மூன்று வேதங்களை வைத்திருக்கும் ராகினி நடிகைக்கும் நடிகருக்கும் ஷார்ட் டெர்ம் காதல் பற்றிக் கொண்டதாம். அந்த இடைக்கால காதல் மாமியின் காதுக்கு வந்ததால்தான் பிரிவு என்கிறார்கள். நடிகருக்கு இப்படி ஷார்ட் டெர்ம் காதல் அடிக்கடி வரும் என்பதாலும், இனி வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாததாலும் நடிகரை பிரிவதென்று மாமி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
Mahalakshmi
Publish Date: Fri, 31 Oct 2014 (10:18 IST)
Updated Date: Fri, 31 Oct 2014 (10:19 IST)