Publish Date: Fri, 31 Oct 2014 (10:02 IST)
Updated Date: Fri, 31 Oct 2014 (10:05 IST)
பிஸ்டல், நைஃப் என்று ஹார்ட்வேர் படங்கள் எடுக்கும் தாஸ் இயக்குனரின் படத்தில் நடிக்க இந்திப்பட ஹீரோக்களும் தலைகீழாக நிற்கின்றனர். ஆனால் இயக்குனரோ, தலக்கு கதை தயாராக வைத்திருக்கிறேன்.
அவர் சம்மதித்தால் உடனே ஷுட்டிங் போக வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இன்னும் தாழ்ந்து போய், தல யின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் என்றும் சொல்லிப் பார்த்தார். இந்தகணம்வரை தல தரப்பு மௌனமே சாதிக்கிறது.
ஏன்?
இயக்குனரின் ஷார்ட் டெர்ம் மெமரி படத்தில் தலதான் நடிப்பதாக இருந்தது. போஸ்டர் எல்லாம் வெளியிட்டபின் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை, பிரகாச ஹீரோ நடித்தார். படம் வெற்றி பெற்றதும் தலயை பெயர் குறிப்பிடாமல் பேட்டிகளில் சீண்டினார் இயக்குனர்.
மேலும், அந்தப் படம் மட்டுமில்லை, சமீபத்தில் வெளியான நைஃபும் திருடப்பட்ட கதைதான். இதுபோன்ற புறவாசல் புராஜெக்ட்களில் - அது தனது கவனத்துக்கு வந்தால் - தல நடிப்பதில்லை. இயக்குனரை அவர் ஒதுக்குவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.
ஆனால், இது வெற்றியை மட்டும் வைத்து விளையாடப்படும் மங்காத்தாவாச்சே. நாளையே தலகீழ் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
Mahalakshmi
Publish Date: Fri, 31 Oct 2014 (10:02 IST)
Updated Date: Fri, 31 Oct 2014 (10:05 IST)