‘காதலர் தினத்தில் ஒரு சர்ப்ரைஸ்: விக்னேஷ் சிவன் அறிவிப்பு

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (18:38 IST)
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்றுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ப்ரைஸ் ஆக அறிவித்துள்ளார்
 
மேலும் இந்த பாடலை தானே எழுதி உள்ளதாகவும் இந்த பாடல் அனைவரையும் கவரும் வகையில் காதலர் தின விருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் என்பவர் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கான காரணம்

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments