கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில், வெளிச்ச நடிகருக்குப் பதில் பாடி பில்டர் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து, இரண்டு படங்களில் நடித்து வருகிறார் பாடி பில்டர் நடிகர். முதலாவது, கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’. இதில், ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நியூயார்க், குன்னூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இரண்டாவது, ‘வாலு’ விஜய்சந்தர் இயக்கிவரும் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்திலும் தமன்னா மற்றும் ஸ்ரீபிரியங்கா என இரண்டு ஹீரோயின்களுடன் நடித்து வருகிறார் பாடி பில்டர். பாண்டிச்சேரியில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த வருட இறுதிக்குள் ‘ஸ்கெட்ச்’ ரிலீஸாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க பாடி பில்டரிடம் பேசியிருக்கிறாராம் கே.வி.ஆனந்த். ‘கவண்’ படத்தைத் தொடர்ந்து, ‘அயன்’ இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். அதில்தான் வெளிச்ச நடிகருக்குப் பதில் பாடி பில்டரை நடிக்கவைக்கப் போகிறார் என்கிறார்கள்.