Publish Date: Wed, 30 Sep 2015 (20:15 IST)
Updated Date: Mon, 05 Oct 2015 (17:38 IST)
இரண்டு ரூபா போட்டு பத்து ரூபா சம்பாதிப்பதில் மில்க் இயக்குனர் ஜகஜால கில்லாடி. அவர் இயக்கியிருக்கும் கரகாட்டப் படத்தை நைஃப் படத்தை தயாரித்தவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
நைஃப் பார்ட்டிகள் இலங்கையின் முன்னாள் அதிபருக்கு வேண்டியவர்கள். எங்கே வில்லங்கம் வருமோ என்பதைவிட, ஈழம் கடந்த உறவுகளிடம் தனது பால்போன்ற பெயர் திரிந்துவிடுமோ என்று அச்சப்பட்டாராம் இயக்குனர். வாங்கியது நீங்களாக இருந்தாலும், வெளியிடுவது உங்களின் நண்பரின் பெயரில் இருக்கட்டும் என்று இயக்குனர் வேண்டுகோள் வைக்க, அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சி என்று உடன்பட்டிருக்கிறார்கள்.
பணமும் வேணும், பாழாப்போன பெயரும் வேணும்னா இப்படியெல்லாம் கரகம் ஆடத்தான் வேண்டியிருக்கு.
Ashok
Publish Date: Wed, 30 Sep 2015 (20:15 IST)
Updated Date: Mon, 05 Oct 2015 (17:38 IST)