Publish Date: Wed, 30 Sep 2015 (17:58 IST)
Updated Date: Wed, 30 Sep 2015 (20:15 IST)
ஒரு படத்துக்கு வில்லன்னு பெயர் வச்சார் சரிதான். அதுக்காக வில்லனாகவே நடிக்கணும்னு கேட்டால் எப்படி? அதுவும் பூமிக்கே நாயகனாக இருப்பவரிடம்?
பிரமாண்ட இயக்குனர் இரும்பு மனுஷனை தூசு தட்டிய போதே சிலருக்கு இரும ஆரம்பித்துவிட்டது. அதிலும் ஆழ்வார்பேட்டையிலிருந்து உறுமல் சத்தமே வருகிறது. படத்தில் உச்சம் நாயகனாக நடிப்பார், அவருக்கு நீங்கதான் வில்லன் என்று எடுத்த எடுப்பிலேயே கத்தியை செருகியிருக்கிறார் பிரமாண்டம். உச்சத்துக்கு எந்தவிதத்திலும் சளைத்தவனில்லை என்று காண்பிப்பதற்காகவே அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருப்பவருக்கு பிரமாண்டத்தின் துருப்பிடித்த கத்தி எப்படியொரு வேதனையை தந்திருக்கும்? நோ என்று ஒரே வார்த்தையில் டீலை முறித்துக் கொண்டுவிட்டார்.
பிரச்சனை தீர்ந்தது போல் தெரிந்தாலும், பிரமாண்டம் போட்ட இந்த வில்லன் டீல் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்துவிட்டது. கரன்சி எவ்வளவு வேணும் சொல்லுங்க, வில்லனாக அவர்தான் வேணும் என்று அடம்பிடிக்கிறார்களாம்.
யானை இளைக்கும் முன்பே எலி சவாரிக்கு கூப்பிட்ட கதையால்ல இருக்கு.
Bala
Publish Date: Wed, 30 Sep 2015 (17:58 IST)
Updated Date: Wed, 30 Sep 2015 (20:15 IST)