Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாயம் செய்யச் சொல்லும் உச்சம்...?

Advertiesment
கிசுகிசு
இனிமேல் படம் நடிக்கணுமான்னு யோசிக்கிறேன் என்று உச்ச நடிகர் சொல்லி பத்து வருடம் ஆகிறது. படம் நடிக்கணுமா என்று கேட்ட பிறகுதான் அதிக படங்களில் ஆர்வத்தோடு நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது நடித்து வரும் படம் இல்லாமல் வேறு இரு படங்களில் நடிக்க இந்தியின் முன்னணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இந்த நிறுவனம்தான் உச்சத்தின் பொம்மை படத்தை தயாரித்தது. 
 
இந்நிலையில் கர்நாடகாவிலிருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. உச்சம் பேருந்தில் பணிபுரிந்த காலத்தில் அவரது தலைவராக இருந்த அப்போதைய சூப்பர் ஸ்டார் (சாண்டல்வுட் டானால் கடத்தப்பட்ட நடிகர்) நடித்த படமொன்றை ரீமேக் செய்யும் திட்டத்தில் உள்ளாராம். விவசாயத்தை புரமோட் செய்யும் அந்தப் பழைய படம் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும் என்கிறார் உச்சத்தின் திக் ப்ரெண்ட்.
 
உச்சம் இதேபோல் ஆசைப்பட்ட ஆயிரம் படங்களிருக்கிறது. கடைசியில் புதிய கதை ஒன்றில்தான் நடிப்பார். திக் ப்ரெண்டுக்கே இது எப்படி தெரியாமல் போனது என்பதுதான் ஆச்சரியம்.
 

Share this Story:

Follow Webdunia tamil