Publish Date: Sat, 05 Sep 2015 (16:56 IST)
Updated Date: Sat, 05 Sep 2015 (16:58 IST)
பாயுற டைகருக்கு கடைசி நேரத்தில் வந்த தடையை உசர நடிகர் ஓரளவு யூகித்துதான் இருந்தார் என்கிறார்கள்.
எந்தப் படமும் வெளியாகாது என்ற தயாரிக்கிறவர்களின் தடாலடி முடிவில் நடிகருக்கே உடன்பாடில்லை. நல்லவேளையாக பிற தயாரிப்பாளர்களால் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
கடைசி நேரத்தில் சில கோடிகள் இருந்தால் மட்டுமே கடன்களை அடைத்து படத்தை வெளியிட முடியும் என்ற நிலையில், தனது சம்பளத்தில் கணிசமான கரன்சியைவிட்டுத் தந்து படத்தை வெளியிட சொல்லியிருக்கிறார் நடிகர். தன்னோட படம் நின்று போனால் கைகொட்டி சிரிக்க ஒரு கூட்டம் இருப்பதை அறிந்தே இந்த நஷ்டத்துக்கு இஷ்டப்பட்டாராம் நடிகர்.
லெனின் அகத்தியநாடன்
Publish Date: Sat, 05 Sep 2015 (16:56 IST)
Updated Date: Sat, 05 Sep 2015 (16:58 IST)