Publish Date: Tue, 01 Sep 2015 (18:22 IST)
Updated Date: Tue, 01 Sep 2015 (19:16 IST)
உச்ச நடிகரின் தாதா படத்தை கடல் கடந்து தொடங்குவதாகத்தான் திட்டம். விசா எல்லாம் தயாரான பிறகு டக்கென்று சென்னையிலேயே செய்திடலாம்யா பூஜை என்று முடிவெடுத்திருக்கிறார்கள். படத்தின் கதை இன்னது என்று ஒருவரியை கசியவிட்டிருக்கிறார்கள்.
கூலி வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களை வேலை தராமல் அடிமைகளாக வைத்திருப்பதும், அவர்களை நாயகன் காபந்து செய்வதும்தான் கதையாம். வெளிநாட்டில்தான் படப்பிடிப்பை தொடங்குவதாக இருந்தனர். வழக்கமாக உச்ச நடிகரின் படம் சென்னையில்தான் பூஜை போடப்படும்.
கமர்ஷியல் தவிர்த்த கதை படத்தில் நடிக்கிறேnம். இந்தமுறை பார்த்து, சென்னையை தவிர்த்து, படத்தின் ரிசல்ட் உல்டாவானால் என்னாவது என்ற சென்டிமெண்ட் பயத்தில்தான் சென்னையிலேயே படத்தை தொடங்குவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
சென்னைக்கு தாதான்னாலும் சென்டிமெண்டுக்கு தப்ப முடியாது.
வச்சார் பார்த்தியா சென்டிமெண்ட் வெடி
லெனின் அகத்தியநாடன்
Publish Date: Tue, 01 Sep 2015 (18:22 IST)
Updated Date: Tue, 01 Sep 2015 (19:16 IST)