Publish Date: Fri, 17 Oct 2014 (10:31 IST)
Updated Date: Fri, 17 Oct 2014 (10:33 IST)
நைஃப் படத்துக்கு சென்சாரில் சான்றிதழ் வாங்கிவிட்டனர். திரையரங்குகள் தயார். படத்தை வெளியிட வேண்டியதுதான் பாக்கி. இருந்தாலும் இன்னும் எடிட்டரின் டேபிளிலிருந்து எழும்பவில்லையாம் இயக்குனர். ஏனாம்?
படம் ஏறக்குறைய இரண்டே முக்கால் மணிநேரம் ஓடுகிறது. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் படத்தை ஓட விடாதீங்க என்று நைஃபின் நாயகனே ஒருமுறை அறிமுக இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவருடைய படமே இப்படி லெங்த்தியாக இருந்தால்?
தவிர, படம் வெளியான பிறகு விமர்சனங்கள் வந்தபின் வெட்டுவதைவிட இப்போதே ட்ரிம் செய்வது நல்லதல்லவா. அதனால்தான் இயக்குனர் மெனக்கெடுகிறாராம்.
அஞ்ச வேண்டியதுக்கு அஞ்சுவது நன்று. இல்லாவிட்டால் அஞ்சானுக்கு நேர்ந்ததுதான் நமக்கும் என்பது தெரியாதவரா இயக்குனர்.
Mahalakshmi
Publish Date: Fri, 17 Oct 2014 (10:31 IST)
Updated Date: Fri, 17 Oct 2014 (10:33 IST)