Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கசிந்ததா காதலிகளின் கதை?

Advertiesment
கிசு
கலகலப்பாக படம் எடுக்கும் இயக்குனர் ஆறடி உசர நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பெயரை அறிவித்த போதே பொம்பளங்க பக்கம் இருந்து முணுமுணுப்புகள் கிளம்பின. இப்போது படத்தின் கதை என்று இணையத்தில் வெளிவந்திருக்கும் செய்திகள் பெண்கள் தரப்பை முக்கியமாக மகளிர் அமைப்புகளை கடுப்பாக்கியுள்ளது.
 
ஹீரோவுக்கு அழகான அத்தைகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மகள்களை ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்க போட்டாப் போட்டி போடுகிறார்கள். இதுதான் படத்தின் கதையாம்.
 
இப்போதே பெண்ணியவாதிகளின் பற்கடிப்பு சத்தம் கேட்கிறது. படம் வெளியாகும் போது போர் கொடி உயரப் போவது நிச்சயம் என்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil