Publish Date: Fri, 11 Aug 2017 (20:30 IST)
Updated Date: Fri, 11 Aug 2017 (20:35 IST)
படம் ரிலீஸான இன்றே ஃபேஸ்புக் லைவ்வில் தன் படம் ஒளிபரப்பப்பட்டதால், கடுப்பின் உச்சத்தில் இருக்கிறாராம் ஒல்லி நடிகர்.
மச்சினிச்சி இயக்கத்தில் ஒல்லி நடிகர் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்துடன் வெளியான இன்னொரு படம் நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில், ஃபேஸ்புக்கில் யாரோ ஒல்லி நடிகரின் படத்தை லைவ் செய்திருக்கிறார்கள். அவருடைய ரசிகர்கள் சிலரே இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார் ஒல்லி நடிகர் என்கிறார்கள்.