Publish Date: Mon, 24 Jul 2017 (16:52 IST)
Updated Date: Mon, 24 Jul 2017 (16:56 IST)
தற்போது தான் காதலித்துவரும் இயக்குனருக்கு, கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளாராம் பெரிய நம்பர் நடிகை.
ஒருவரை நம்பிவிட்டால் போதும்… அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வது பெரிய நம்பர் நடிகையின் வழக்கம். அதுவும் திடீர் திடீரென அவர் வாங்கிக் கொடுக்கும் கிஃப்ட்டில், சம்பந்தப்பட்டவர்கள் அசந்து விடுவார்கள். வம்புவைக் காதலிக்கும்போதும் சரி, டான்ஸரைக் காதலிக்கும்போதும் சரி… ஏகப்பட்ட பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் பெரிய நம்பர் நடிகை.
தற்போது காதலித்துக் கொண்டிருக்கும் கடவுள் பெயர் கொண்ட இயக்குனருக்கும் அடிக்கடி பரிசு வாங்கிக் கொடுத்து அசத்தும் நடிகை, லேட்டஸ்ட்டாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். பல லட்சம் மதிப்புள்ள இந்தக் காரை சாலையில் ஓட்டிச் சென்றால், பார்ப்போர் வாயைப் பிளப்பது நிச்சயமாம்.