Publish Date: Sat, 11 Oct 2014 (09:10 IST)
Updated Date: Sat, 11 Oct 2014 (09:11 IST)
வசந்தகால இயக்குனர் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர். ஆனால் அவரது ஒரு படத்தைத் தவிர வேறு எதுவும் சரியாக ஓடவில்லை. முந்தைய சரித்திரப் படமும் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கிறது.
எண்ணம் இருக்கிற அளவுக்கு திரைக்கதையை செதுக்குவதில் கை வண்ணம் இல்லாததே அவரது தோல்விக்கு பிரதான காரணம். இந்த பலவீனத்தை புரிந்து கொள்ளாமல் மீண்டும் ஒரு சரித்திரப் படத்தை எடுத்துள்ளார். புயல் இசையமைத்திருந்த போதிலும் படத்தை வாங்க தயங்குகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இரண்டு ஹீரோக்கள் நடித்திருந்தும் படம் இன்னும் விலைபோகாமல் உள்ளது. எந்த பண்டத்துக்கு சந்தையில் கிராக்கி என்பது தெரியாமல் அல்லது அதைப் பற்றி கவலைப்படாமல் படமெடுத்து யார் வாங்க வருவார்கள் என காத்திருப்பதை எந்தவகையில் சேர்ப்பது?
வீரமணி பன்னீர்செல்வம்
Publish Date: Sat, 11 Oct 2014 (09:10 IST)
Updated Date: Sat, 11 Oct 2014 (09:11 IST)