Publish Date: Mon, 15 May 2017 (14:46 IST)
Updated Date: Mon, 15 May 2017 (14:51 IST)
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ‘ராமாயணம்’ படத்தில், பெரிய நம்பர் நடிகை சீதையாக நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில், ‘ராமாயணம்’ படத்தை 3 பாகங்களாக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் அல்லு அரவிந்த். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. அல்லு அரவிந்தின் மகன் அல்லு அர்ஜுன் ராமனாக நடிக்கலாம் என்கிறார்கள்.
இந்நிலையில், சீதையாக யார் நடிப்பது என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும்பாலானவர்கள், பெரிய நம்பர் நடிகையைத்தான் பரிந்துரைக்கிறார்களாம். காரணம், ஏற்கெனவே ஒரு படத்தில் சீதையாக நடித்துள்ளார் அவர். எனவே, சீதையைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும். அதனால், கதையை எளிதாக உள்வாங்கி நடித்து விடுவார். அத்துடன், ஷூட்டிங் நடைபெற்றபோது, விரதம் இருந்து நடித்தார். எனவே, சீதையின் கதாபாத்திரத்திற்கு பெரிய நம்பர் நடிகைதான் 100% பொருத்தமானவர் என்கிறார்களாம்.