மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்கள் இருந்தாலும் சிவகார்த்திகேயன் அடுத்த வாரம் முதல் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பை தொடங்க சம்மதித்துள்ளார். காரணம் நேற்று வெளியான சமந்தாவின் திருமண அறிவிப்பு தானாம்
சிவகார்த்திகேயன்-பொன்ராம் படத்தில் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், வரும் அக்டோபர் 6ஆம் தேதி சமந்தாவின் திருமணம் என்று நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே திருமணத்திற்கு முன்னரே சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் படக்குழுவினர்களை கேட்டுக்கொண்டுள்ளாராம்
இதன்படி ஜூலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 16ஆம் தேதியே தொடங்கவுள்ளார்களாம். முப்பதே நாட்களில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்து அவரை வழியனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.