Publish Date: Thu, 08 Jun 2017 (15:47 IST)
Updated Date: Thu, 08 Jun 2017 (15:58 IST)
நேற்று வெளியான ஒல்லி நடிகரின் டீஸரால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒல்லி நடிகர் நடித்துள்ள இரண்டாம் பாகத்தின் டீஸர், நேற்று மாலை வெளியானது. பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர் இந்த டீஸரை வெளியிட்டார். வெறும் 37 விநாடிகளே கொண்டுள்ளது இந்த டீஸர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில், இசை பக்கபலமாக இருந்தது. ஆனால், தற்போது வேறொரு இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார். இது நன்றாக இருக்கிறது என்றாலும், முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும், டீஸரில் அப்பா கேரக்டரில் நடித்தவர் மட்டுமே வசனம் பேசுகிறார். ஒல்லி நடிகர் சண்டை போடுகிறாரே தவிர, வாய் திறந்து எதுவுமே பேசவில்லை. சமீபத்தில் வெளியான ‘தல’ டீஸரில், அவர் பேசிய வசனம் செம பாப்புலர். அந்த வசனம் வைரலாக மாறி, பாடலிலேயே அந்த வசனத்தைச் சேர்த்தனர். அதுபோல ஏதாவது ஒல்லி நடிகர் பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என்கிறார்கள்.
cauveri manickam
Publish Date: Thu, 08 Jun 2017 (15:47 IST)
Updated Date: Thu, 08 Jun 2017 (15:58 IST)