Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ், விக்ரமுக்கு ஏற்பட்ட திடீர் சோதனை

தனுஷ், விக்ரமுக்கு ஏற்பட்ட திடீர் சோதனை
, வியாழன், 6 ஜூலை 2017 (05:54 IST)
பிரபல இயக்குனர் கவுதம் மேனன், தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். காரணம் ஃபைனான்ஸ் தட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.



 
 
ஏற்கனவே கவுதம்மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆனால்தான் அதில் வரும் பணத்தை வைத்து மேற்கண்ட இரண்டு படங்களையும் முடிக்கும் நிலைமையில் இருக்கின்றாராம் கவுதம் மேனன்
 
ஆனால் திடீரென தியேட்டர் ஸ்டிரைக், ஜிஎஸ்டி பிரச்சனை வந்துவிட்டதால் இந்த பிரச்சனை முடிந்தாலும் போட்டி அதிகமாக இருப்பதால் நெஞ்சம் மறப்பதில்லை' படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை. எனவே 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'துருவ நட்சத்திரம் ஆகிய இரு படங்களும் இந்த ஆண்டில் வெளியாக சாத்தியமில்லை என்றே கிசுகிசுக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உனக்காக ரூ.5 கோடி செலவு செய்ய என்னால முடியாது: அனுஷ்காவிடம் இயக்குனர் கறார்