சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 'டோரா' சுமாரான வெற்றியை போதிலும் இந்த படத்தை அனைத்து விநியோகிஸ்தர்களும் அதிக விலை கொடுத்து இந்த படத்தை வாங்கியதால் அனைவருமே நஷ்டம் அடைந்தனர்.
நயன்தாராவின் மாஸ் படத்திற்கு வெற்றியை நிச்சயம் அளிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த நஷ்டத்தால் விநியோகிஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் நயன்தாராவின் அடுத்த படமான 'அறம்' படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் தோல்வி அடைந்தாலும், அடுத்த படத்தின் வியாபாரம் பிரமாண்டமாக இருக்கும். அதற்கு காரணம் அந்த நடிகர்களுக்கு உள்ள ரசிகர்களின் கூட்டம். ஆனால் நயன்தாரா அந்த மாதிரியான ரசிகர்கள் கூட்டம் இல்லாததால் தற்போது அவர் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் விநியோகஸ்தர் சங்க கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர், “நயன்தாரா நடிச்ச டோரா படத்துக்கு அவ்வளவு பெரிய விலை கொடுத்து வாங்குனீங்க. கடைசியில் என்னாச்சு. பட்டை நாமம்தான் விழுந்திச்சு. நயன்தாரான்னா என்ன பெரியா இதுவா? ஏன் அவ்வளவு பெரிய தொகையை கொடுத்து விழுந்தடிச்சு வாங்குனீங்க? இப்ப ஐயோ அம்மான்னு புலம்புறீங்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு பின்னணியாக சிம்பு-நயன்தாரா காதல் தோல்வி காரணமாக இருக்குமோ...