பொறுமையால் என்னை ஜெயிக்கிறார் - வருங்கால மனைவி குறித்து போனி கபூர் மகன்!

சனி, 18 ஏப்ரல் 2020 (11:42 IST)
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி.

இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் சேர்ந்து அவ்வப்போது அவுட்டிங் சென்று வந்ததால் இருவரும்  காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டனர். இதனை ஆரம்பத்தில் மறுத்த இருவரும் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டனர்.


இந்நிலையில்  நேற்று ரசிகர்களுடன் லைவ் சேட்டில் பேசிய அர்ஜுன் கபூரிடம் ரசிகர் ஒருவர் மலாய்கா உடனான திருமணம் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த அர்ஜூன் , இப்போது நாங்கள் திருமணம் செய்ய விரும்பினால் எப்படி முடியும்?. திருமணம் முடிவானதும்  நிச்சயம் ரசிகர்களுக்கு சொல்லுவேன். மேலும் மலாய்கா குறித்து கூறிய அவர் " "என்னுடன் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. அவருடைய பொறுமையால் தான் என்னை ஜெயிக்கிறார்" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வைரலாகும் ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படம் - இதுவரை யாரும் பார்த்திருக்காமாட்டீங்க!