மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மிகப்பெரிய வன்முறை நடந்த நிலையில் இந்த வன்முறையில் உயிரோடு இருக்கும் ஒருவர் பலியானதாக மேற்குவங்க பாஜக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறையில் மும்பையைச் சேர்ந்த அப்ரோ பானர்ஜி என்பவர் உயிரிழந்ததாகவும் அவருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பாஜக தனது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டு இருந்தது
ஆனால் அப்ரோ பானர்ஜி தான் நலமாக இருப்பதாகவும் தான் மேற்கு வங்க மாநிலம் வன்முறையில் தான் இறந்துவிட்டதாக பாஜக தவறான தகவலை பரப்பி வருவதாகவும் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் கூறியிருந்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து பாஜக போலி செய்திகளை பரப்பி வருவதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாஜக விளக்கம் அளிக்கும்போது அப்ரோ பானர்ஜியின் புகைப்படம் தவறுதலாக இணைக்கப்பட்டு விட்டது என்பதும் அவரது கட்டுரை ஒன்றில் உள்ளடக்கத்தை பயன்படுத்தும் போது தவறுதலாக அவரது புகைப்படமும் இடம் பெற்று விட்டதாகவும் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தது