அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பு தரப்பு இந்த படத்தின் வியாபாரத்தை வெற்றிகரமாக தொடங்கிவிட்டது.
சமீபத்தில் இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் பெரிய தொகை ஒன்றுக்கு முடிந்துவிட்ட நிலையில் தற்போது கர்நாடக மாநில ரிலீஸ் உரிமையின் வியாபாரமும் முடிந்துவிட்டது. சூர்யாவுக்கு தெலுங்கு மாநிலங்கள், விஜய்க்கு கேரளா போல, கர்நாடகம் அஜித்தின் கோட்டையாக கருதப்படுகிறது.
அஜித்தின் முந்தைய படங்களான ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்கள் கர்நாடகாவில் நல்ல வசூலை கொடுத்து விநியோகிஸ்தர்களின் கல்லாவை நிரப்பியது. அந்த வகையில் 'விவேகம்' படத்தின் உரிமையை வாங்க ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த படம் ரூ.5.8 கோடிக்கு விலை போயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினி படத்தை அடுத்து இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போயிருக்கும் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் படத்தின் வியாபாரத்தை கண்டு கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.