தமிழ் சினிமாவுக்கு தற்போது நேரமே சரியில்லை. ஆன்லைன் பைரசி ஒருபுறம், திருட்டுடிவிடி ஒருபுறம் என இதையே சமாளிக்க முடியாமல் இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி வரி ஒருபுறமும், திரையரங்கு வேலைநிறுத்தம் இன்னொரு புறமும் என நாலாபுறமும் தயாரிப்பாளரின் கழுத்தை நெறிக்கின்றதாம்
இந்த நிலையில் இதற்கு ஒரே தீர்வு, இனிமேல் தியேட்டரை நம்பாமல் நேரடியாக டிடிஎச், கேபிள் டிவி, தயாரிப்பாளர் சங்கத்தின் ஆப் என டெக்னாலஜி மூலம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம்
அதே நேரத்தில் இந்த புதிய முயற்சியை ஒரு பெரிய படத்தில் இருந்து ஆரம்பித்தால் அது விரைவில் பொதுமக்களை ரீச் அடையும் என்று முடிவு செய்து விரைவில் வரப்போகும் அஜித்தின் 'விவேகம்' படத்தில் இருந்து டிடிஎஸ் ரிலீஸை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு, அஜித் ஓகே சொன்னால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டாதால் அஜித்திடம் விரைவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த போகின்றார்களாம். அஜித் சொல்லபோகும் 'எஸ்' என்ற ஒரே ஒரு வார்த்தை தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்று கூறப்படுகிறது.