Publish Date: Tue, 14 Mar 2017 (14:46 IST)
Updated Date: Tue, 14 Mar 2017 (15:14 IST)
வெற்றி என்ற பொருள்படும் தலைப்பைக் கொண்ட படத்தில் அறிமுகமானவர் இந்த இரண்டெழுத்து நடிகை. தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், பிறமொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் வாய்ப்பில்லாமல் வாடிய நடிகை, தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியின் டான்ஸ் ஷோவில் நடுவராக இருக்கிறார். அந்த ஷோவில் பேசிய நடிகை, அஜீத்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். அத்துடன், அவருடன் சேர்ந்து நடித்தபோது அவர்மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.